உயிர்மை:
விழித்திருப்பவனின் இரவு - எஸ்.ராமகிருஷ்ணன்
உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் (நாவல்)
மறைவாய் சொன்ன கதைகள்' - கி.ராஜநாராயணன் & கழனியூரன் (நாட்டுப் புற பாலியல் கதைகளின் தொகுப்பு),
ஒரு பனங்காட்டு கிராமம் - மு. சுயம்புலிங்கம் (சிறுகதை)
'கு.அழகிரிசாமி கடிதங்கள்' (கி.ராவுக்கு எழுதியது)
பெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி
ராஸ லீலா (நாவல்) - சாரு நிவேதிதா
ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - மணா
இந்தியப் பிரிவினை சினிமா இந்து முஸ்லீம் பிரச்சினை - யமுனா ராஜேந்திரன்
தற்கொலை முனை - சுதேசமித்திரன் (சிறுகதை)
ஒரு இரவில் 21 செ.மீ. மழை பெய்தது - முகுந்த் நாகராஜன் (கவிதை)
பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும் - யமுனா ராஜேந்திரன்
தனிமையின் வழி - சுகுமாரன்
நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள் - மு. சுயம்புலிங்கம் (கவிதை)
பாலகாண்டம் - நா முத்துக்குமார்
கண் பேசும் வார்த்தைகள் - நா முத்துக்குமார்
பெருஞ்சுவைக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) - ஜெயந்தி சங்கர்கிழக்கு பதிப்பகம்:
ரெண்டு - பா.ராகவன் (நாவல்)
கே.ஜி.பி - என்.சொக்கன்
மு.க - ஜெ. ராம்கி
ஹிஸ்பொல்லா (பயங்கரவாதத்தின் முகவரி) - பா ராகவன்
சர்வம் ஸ்டாலின் மயம் - மருதன்
மும்பை : குற்றத் தலைநகரம் - என்.சொக்கன், பத்ரி சேஷாத்ரி, மருதன், முகில், ஆர்.முத்துக்குமார், ச.ந. கண்ணன்
வல்லினம் மெல்லினம் இடையினம் - என் சொக்கன்
பயாஸ்கோப் - அசோகமித்திரன
வேர்ப்பற்று - இந்திரா பார்த்தசாரதி
வைக்கம் முகமது பஷீர் - (மலையாள மூலம்) ஈ.எம்.அஷ்ரஃப் : (தமிழில்) குறிஞ்சிவேலன்விகடன்:
தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
டூரிங் டாக்கீஸ் இயக்குநர் சேரன்
எத்தனை மனிதர்கள் - சின்னக்குத்தூசி
இவன்தான் பாலா
காலம் - வண்ணநிலவன்காலச்சுவடு:
சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முஹம்மது மீரான்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும் - பொ வேல்சாமி
தொலைவில் (கவிதை) - வாசுதேவன்
மிதக்கும் மகரந்தம் (கவிதை) - எழிலரசிசாகித்திய அகாதெமி:
தமஸ் (இருட்டு) - இந்தி நாவல் :: மூலம் - பீஷ்ம சாஹ்னி (தமிழாக்கம் - வெங்கட் சாமிநாதன்)
பருவம் - கன்னட நாவல் :: மூலம் - எம்.எஸ். பைரப்பா (தமிழாக்கம் - பாவண்ணன்)
இந்திய இலக்கிய சிற்பிகள் : டி எஸ் சொக்கலிங்கம் - பொன் தனசேகரன்
இந்திய இலக்கிய சிற்பிகள் : பி எஸ் ராமையா - மு பழனி இராகுலதாசன்
இந்திய இலக்கிய சிற்பிகள் : இறையருட் கவிமணி கா அப்துல் கபூர் - ஹ மு நத்தர்சா
இந்திய இலக்கிய சிற்பிகள் : திரிகூடராசப்பக்கவிராயர் - ஆ முத்தையா
இந்திய இலக்கிய சிற்பிகள் : பண்டிதமணி மு கதிரேசன் செட்டியார் - நிர்மலா மோகன்காவ்யா:
ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் - (தொகுப்பாசிரியர்) தமிழவன்
இலக்கிய விசாரங்கள் - க நா சு கட்டுரைகள் 1
இலக்கிய விமர்சனங்கள் - க நா சு கட்டுரைகள் 2
பொய்த்தேவு - க நா சு (நாவல்)தமிழினி:
கொற்றவை - ஜெயமோகன் (நாவல்)
யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி (நாவல்)
ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ் (நாவல்)
பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர் (நாவல்)
மணல்கடிகை - கோபாலகிருஷ்ணன் (நாவல்)
தொலைகடல் - உமா மகேஸ்வரி (சிறுகதை)
கொங்குதேர் வாழ்க்கை 1, 2 (கவிதை)
அலைகளினூடே - (தொகுப்பாசிரியர்) அ கா பெருமாள்
நரிக்குறவர் இனவரையியல் - கரசூர் பத்மபாரதிவேறு:
ஆரிய உதடுகள் உன்னது - பாமரன் (அம்ருதா)
தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் (விஜயா பப்ளிகேஷன்ஸ்)
பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் - நாகரத்தினம் கிருஷ்ணா
மாண்டொழிக மரண தண்டனை - வி ஆர் கிருஷ்ணய்யர்-கே பாலகோபால், பழ நெடுமாறன் - தியாகு (மோ ஸ்டாலின் நினைவு நூலகம்)
நிமிர வைக்கும் நெல்லை - வழக்கறிஞர் கே எஸ் இராதாகிருஷ்ணன் (பொதிகை-பொருநை-கரிசல்)
செடல் (நாவல்) - இமையம் (க்ரியா)
மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - எஸ் வி ராஜதுரை, வ கீதா
தவறவிடக் கூடாத பத்து புத்தகங்கள்:
இராக் பிளஸ் சதாம் மைனஸ் சதாம் - பா ராகவன் (கிழக்கு)
சுப்ரமண்ய ராஜு கதைகள் (கிழக்கு)
தேடு:கூகுளின் வெற்றிக் கதை - சொக்கன் (கிழக்கு)
மனித உரிமைகள் - எஸ் சாந்தகுமார் :: தமிழில் - என். ராமகிருஷ்ணன் (மக்கள் கண்காணிப்பகம்)
இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை : கு அழகிரிசாமி - வெளி ரங்கராஜன் (சாகித்திய அகாதெமி)
தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா (உயிர்மை)
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - அ முத்துலிங்கம் (உயிர்மை)
ஆஸ்பத்திரி (நாவல்) - சுதேசமித்திரன் (உயிர்மை)
கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன் (உயிர்மை)
சிறைவாழ்க்கை - தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் சிறையனுபவம் (சாளரம் - பொன்னி)கொசுறு:
கரித்தாள் தெரியவில்லையா தம்பீ... - பெருமாள்முருகன் (காலச்சுவடு)
Search This Blog
Monday, August 18, 2008
Sunday, August 17, 2008
செய்யுள்!!!
பட்டினத்துப் பிள்ளை:
முதற் சங்கம் அமூதூட்டும்மொய் குழலார்
சங்கம் நல் விலங்கு பூட்டும் - கடைச் சாங்கமாம்பூது அது ஊதும் அம்மட்டோ இம்மட்டோநாம் பூமி வாழ்ந்த நலம்செய்யுள்கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குற மகளும்மூழக்குழக்குத் தினை தந்தாள் - சோழா கேள்உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதைஒப்பிக்கும் எந்தன் உளம்புற நானூறுஏணிச்சேரி முட மோசியார்மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவோன்வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்குன்றம் பாடின கொல்லோகளிறு மிக உடைய இக் கவின் பெறு காடேஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்(பாடப்பெற்ற மன்னன் ஆய் அண்டிரன்)விளங்குமணிக் கொடும் பூண் ஆ அய்-நின்னாட்டுஇளம் பிடி ஒரு சூல் பத்து ஈனுமோநின்னும் நின் மலையும் பாடி வருநர்க்குஇன் முகம் கரவாது உவந்த நீ அளித்தஅண்ணல் யானை எண்ணின்,கொங்கர்க்குடகடல் ஓட்டிய ஞான்றைத்தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவேநாலடியார்துய்த்துக் கழியான் துறவோர்க் கொன்றீகலான்வைத்துக் கழியும் ம்டவோனை - வைத்தபொருளும் அவனை நகுமே. உலகத்துஅருளும் அவனை நகும்திருமந்திரம்ஒன்று அவன்தானே,இரண்டு அவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் , நான்கு உணர்ந்தான் ஈந்துவென்றனன் , ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச் சென்றனன் , தானிருந்தான் உணர்ந்து எட்டேமூதுரைஉற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்பற்றலரைக் கண்டால் பணிவரோ== கற்றூண்பிளந்திறுவதல்லால் பெரும் பாரந் தாங்கின்தளர்ந்து வளையுமோ தான்நாலடியார்அரக்காம்பல் நாறும் வாய் அம்மருங்கிற் கன்னோபரற்கானம் ஆற்றின கொல்லோ - அரக்கார்ந்தபஞ்சு கொண்டூட்டினும் பையெனப் பையெனவென்றுஅஞ்சிப்பின் வாங்கும் அடிநாலடியார்ஆ வேறுருவின ஆயினும் ஆபயந்தபால் வேறுருவின வல்லவாம் -பால் போல்ஒருதன்மைத் தாகும் அறநெறி. ஆ போல்உருவு பலகொளல் ஈங்குமூதுரைநற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலாமூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில்காக்கை உகக்கும் பிணம் with regs vasan

Sunday, August 3, 2008
நான் இனி மெல்லச் சாவேன் !!
1980
ஆனாலும் பழம் பாடல்கள், செய்யுள்கள் மற்றும் இலக்கணங்களால் தமிழ் வகுப்பு போரடிக்க ஆரம்பித்தது. நேர் மா, புளி மா, அடை மா எல்லாம் வந்து என் சின்னப் புத்திக்கு எட்டாமல் போகவே இலக்கணத்தில் சூன்யம்.
சில பாடல்கள் சுவரசியமாக இருக்கும். “தத்தா ! நமர்!” இடம் சுட்டிப் பொருள் கூறு என்பதற்கு நல்ல இட்டு கட்டி பாஸ் மார்க் வாங்கி விடுவேன். தமிழில் மார்க் கம்மியானால் கண்டுக்க மாட்டார்கள். “போட மாட்டாங்கப்பா ! “ என்பார்கள் பெரியோர். “இட்டார் பெரியோர் ! இடாதார் இழிகுலத்தோர்” என்ற பாடல் மட்டும் மனதில் அரித்து தமிழ் வாத்தியார்களை வெறுக்க வைத்தது. மதிப்பெண் வாங்காதது இலக்கணம் சரியாகப் அறியாததால். இப்போதும் அடியேன் அறிகிலேன் !
ஆங்கிலத்தில் அப்போது “ஜெரண்ட்”, “ரென் அண்ட் மார்ட்டின்” இலக்கணப் புத்தகத்தையெல்லாம் கரைத்துக் குடித்தேன் !
தமிழ் உரைநடைப் பகுதி சில நன்றாக இருக்கும். பெரியாரைப் பற்றி இருக்கும். அண்ணாவைப் பற்றி இருக்கும். பல சுவாரசியமில்லாததாக இருக்கும். காந்தியை பற்றி இருக்கும். சத்திய சோதனை படித்ததாக ஞாபகம். அடுத்த நாளே பொய் சொன்னதாகவும் ஞாபகம் !
வீட்டில் தமிழ்வாணனின் கல்கண்டு வரும். அதில் தமிழ்வாணனின் சங்கர்லால் தமிழைப் புதுமையாகப் பேசுவார். ஜேம்ஸ் பாண்ட் போன்று வரும் அவருக்கும், அவரின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மிக நாகரிகமாகவே இருக்கும். நான் “மாடர்னா” க உணர்ந்தேன். அதற்கும் ஆங்கிலத்திற்கும் சம்பந்தமில்லை என்று கண்டுபிடித்தேன். டா (தேநீர்!) நிறையக் குடிக்க ஆரம்பித்தேன், சங்கர்லாலைப் போன்று! ஒரு மாது (என் அம்மா தான்!) தான் கொடுப்பாள் (ன் ?).
(தமிழ்வாணன் கதைகளில் மாது என்பது சங்கர்லாலின் வேலைக்காரன் !)
1984
பிறகு தேவனின் எழுத்துக்கள், கல்கியின் எழுத்துக்கள் ஆர்வத்தினைத் தூண்ட, அப்பா மூலம் சாண்டில்யனின் வேக, விவேகமான சினிமா போன்ற மயக்க எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்தேன். வரலாறை வேறு விதமாகக் காண்பித்த தன்மை எனக்குப் பிடித்திருந்தது. சாண்டில்யனின் மோகக் காட்சிகளும், லதாவின் ஓவியங்களும் என்னைக் கவர ஆரம்பித்தன (வேறு காரணங்களுக்காக). பெண்களின் உடல் சம்பந்தப்பட்ட தமிழறிவு கொழுந்து விட்டெறிய ஆரம்பித்தது !
இளவரசிகளுடன் பல்வேறு கற்பனைக் காட்சிகள்!
1986
போதும் இதெல்லாம் படித்தது என்று வீட்டில் தடா “தடா”லென்று விழுந்தது. உருப்பட வழி பாரு” அம்மா சொன்னாள்.
கணிதம், பூகோள, அறிவியல் அனைத்தும் ஆங்கிலத்தைச் சுற்றவே ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இனார்கானிக், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்று பல்வேறு அமிலங்களை மனதும், அறிவும் செறிக்க ஆரம்பித்தது.
பொழுது போக்குத் தமிழ் ரேடியோ மூலமாகப் பாடல்கள் மூலம் மட்டும் அவ்வப்போது காதில் எட்டும். சென்னைத் தொலைக்காட்சியில் “உழைப்பவர் உலகம்”, “வயலும் வாழ்வும்” பார்த்துத் தமிழை மறக்க முயற்சி செய்தேன். முடியவில்லை ! விடாமல் துரத்தியது. ரஜினிகாந்தும் தமிழைக் கெடுக்க “நெரய” முயற்சி செய்தார். முடியலை! ஜாக்கி சான் வந்து தமிழ் பேசியதால், எனக்கு தமிழறிவு மேலும் அதிகரித்தது.
தமிழ் பக்கம் அறவே போகவில்லை. போக பைத்தியமா என்ன ?. புள்ளியியல் தமிழில் படிக்க மறுத்தேன். 6 எழுத்துக்களை எழுதவே கடினமாக இருந்தது. Statistics என்று சுலபமாக 10 எழுத்துக்களைவைத்து எழுதி படித்தேன்.
“ ?ிந்தி கத்துக்கடா !” பம்பாயில வேலை கிடைத்தால் என்ன பண்ணுவே ? என்று அம்மா தள்ள, அழகிய பெண்களைச் சந்தித்து பேசுவதற்காக ?ிந்தி வகுப்பு செல்ல ஆரம்பித்தேன்.
தமிழறிஞர் ஒருவர் ?ிந்தியைத் தமிழைப் போன்று உச்சரித்து சொல்லித் தொலைத்தார்.
இரு வழியாகத் “தந்தி ( தமிழ் + ?ிந்தி!) மொழி” படித்தேன்.
1990
இந்தப் பெண்கள் வேறு தமிழ் பேசினால் முகத்தைத் திருப்புவதில்லை. ஆங்கிலத்தில் கலாய்த்தால், திரும்பிப் பார்க்க ஒரு காரணமாக இருக்கும். பீட்டர் தான் நமக்கு சொந்தம்.
திருவள்ளுவரை வயசான பிறகு பார்க்கலாம் என்று தமிழை மூட்டைக் கட்டி பரண் மேல் நாடி ஜோதிட ஓலைச் சுவடியாகப் போட்டு விட முடிவெடுத்தேன். நிறைய “பீட்டர்” (ஆங்கிலம் பேசுவது தான் சென்னைத் தமிழ் மொழியில்!) விட காதல், கலவி, குழந்தைகள் வந்த பிறகு . . .
“ம்ம்ம்ம் அப்பா சொல்லு !”
“டாடி”
“அம்மா சொல்லு”
“மம்மி”
“உன் பேர் சொல்லு ?”
குழந்தை பேந்தவாக முழிக்க, “பாரு உன் குழந்தைக்குத் தமிழ் வர மாட்டேங்குது !”
“வாட் இஸ் யுர் நேம் ?”
பளிச்சென்று வந்தது பதில்.
“டான் பிரவுன் ஒரு நல்ல எழுத்தாளர் தான்! டாவின்சி கோட் படித்திருக்கிறாயா ?”
“இல்லை. நான் படித்ததில்லை “.
“நிறையப் படிக்கணும். அப்பதான் மற்றவங்க என்ன சொல்றாங்க என்று தெரிய வரும்”
“சினிமா நடிகைகள் ஏர்போர்ட்டில் அது தான் கையில் வைத்திருப்பார்கள். ஏன் நம்ம வெளிநாட்டுக்குப் போகும் நம் தங்கங்களும் அது தான் படிக்கும். ஏர்போர்ட்டில் கையில் பொன்னியின் செல்வன் வைத்திருந்தால் ஒரு மாதிரி இருக்கும்.”
“கல்கியின் பொன்னியின் செல்வன் படித்திருக்கிறாயா ?”
“இல்லை”
“ஸிட்னி ஷெல்டான் ? “
“ஓ யெஸ் !”
“ஜெயகாந்தன் ?”
“யாரு ?”
“ஜான் கிரிஷாம் ?”
“ஓ ! பிரமாதமாய் வக்கீல்களை வைத்து கதை எழுதுவாரே ?”
“தேவனின் ஜஸ்டிஸ் ஜெகன்னாதன் படிச்சிருக்கியா ?”
“கேள்வியே பட்டதில்லை !”
“நிறையப் படிக்கணும். அப்பதான் மற்றவங்க என்ன சொல்றாங்க என்று தெரிய வரும். யார் எழுதியது என்று பார்க்காமல் எல்லாவற்றையும் படிக்கணும். அப்ப தான் யார் என்ன எப்படி சொல்ல வர்றாங்க என்று சொல்லணும். இல்லையென்றால் ஒரு சாரார் எழுதுவது மட்டும் எஞ்சி நின்று அது மட்டும் தான் உண்மை என்று மடத்தனமான அறிவு வளரும்”.
“அவங்க யாரென்று தெரியாதே ?”
“படிக்க முயற்சி பண்ணாமல் ஒருவருடன் பேசாமல், அவர் எழுதியது படிக்காமல் எப்படி அவர்களைப் பற்றித் தெரியும் ?”
“டைம் இல்லை !”
“டைம் இல்லை என்று சொல்லாதே ! ?ாரி பாட்டர் கியூவில் நின்று வாங்க வில்லை ? என்னிக்காவது தேடி வாண்டு மாமா எழுதியது போய் வாங்கிப் படித்திருக்கிறாயா ?”
“நம்மவங்க அதிகம் எழுதறதைப் பார்க்கலை !”
“புத்தகக் கண்காட்சி ஆர்ட்ஸ் காலேஜில் வந்த போது போகாமல் நீ பீர் குடிக்க பார் தானே சென்றாய் ?”
“சும்மா, ஜாலிக்குப் போனேன் ! “
“புத்தகம் படிப்பதும் சும்மா ஜாலிதான் ! படிச்சு பாரு !”
“படிச்சிருக்கேன் ! “மஜாவான” புத்தகம் படிப்பேன் !”
“அதில நீ கிராதகன் தான் ! நம்மவங்க சொல்றதை மஜா விஷயத்தையும் சேர்த்து, மற்றவங்க படிக்க வேண்டாமா ? நீ சொன்னதை, கல்கி சொன்னதை, புதுமைப்பித்தன் சொன்னது, ஜெயகாந்தன் சொன்னது, திஜா சொன்னது என்னவென்று மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம் ?. அதுக்கு நாமெல்லாம் ஆங்கிலத்தில் எழுதணும்.”
“காம சூத்ராவிற்குப் பின்பு (அதுவே சமஸ்கிருதம் மூலம்!) ஒரு நல்ல புத்தகம் தமிழில் வரவேயில்லை. நான் எழுதட்டுமா ?”
“சரி ! எழுது! தமிழ் தெரியுமா ?”
“அந்த மாதிரி விஷயத்தில் எனக்கு நிறைய பரிச்சயம்”
“அப்ப கவலை விடு. செளகரியம்!”
“ரெளவுலிங் ?ாரி பாட்டரில் பிளந்து கட்டுறாராமே ?. வா கியூவில் நின்று வாங்கலாம். வீட்டுக்கு வந்தா ஒரு “காப்பி” யோடு வான்னு மகன் சொல்லிட்டான்”
“ஏன் கோகுலம் வாங்கித் தரமாட்டாயா ?”
“உன்னைக் கேட்டேன் பார் !”
வீட்டிற்குப் போய் குழந்தையிடம், “என்ன படிக்கிறாய் ?”
பேந்தாவாக முழித்தது குழந்தை.
“விச் ?ாரி பாட்டர் புக் ஆர் யூ ஸ்டடியிங் ?”
“புக் நம்பர்! 5 ! இட் இஸ் மார்வெலஸ்”.
“வீட்ல அம்மா என்ன சமைத்தாள் ?”
“பொட்டேடோ கறி !”
“உருளையா ?”
“ம்ம்ம் ?”
பேந்தாவாக முழித்தது குழந்தை.
இவன் தமிழ் பேசுவானா ? என்று மனைவியிடம் கேக்க “பேசுவானாத் தெரியலையே ? என்ன பண்ணலாம்” என்று அபத்தமாகப் பதில் வந்தது.
2020
குழந்தை பெரியவனாது.
அவளைப் பார்த்தது.
“ஆர் யூ டமிலியன் ?”. “டு யூ நோ டமில் ?” “நோ ! மை பேரண்ட்ஸ் அண்ட் கிராண்ட்மா யூஸ்ட் டு ஸ்பீக்!”
“கேன் யூ ஸ்பீக் டமில் ! ?”
“நோ !”
“ஒய் ?”
“பிகாஸ், ஐ டோன்ட் வாண்ட் டு ( எனக்குப் பிடிக்கலை !)”
சரி ! இரண்டும் ஒன்று தான் ! ரெண்டுங் கெட்டானகளாக இருக்கிறார்கள் ! திருமணம் பண்ணி வைப்போம் ! பண்ணி வைத்தேன் !
மீண்டும் கலவி, குழந்தைகள் . . . .பெருக்கம் முதலியன ஸ.
2040
“விச் புக் ஆர் யூ ஸ்டடியிங் ?”
“It is about “Death of Languages”. It is interesting to read “How several of them had to die!”.
“இங்கு நான் சாவக் கிடைக்கிறேன். இவங்க மொழியப் பற்றி பேசுகிறார்களே ?” என்று “லொக்! லொக்’ கென்று இருமினேன் .
“My dad is not feeling well. I have to give him something to read in his last days ! I can not read to him since I do not know how to read his South Asian lanaguage”.
“Dad, what do you want to read ?”.
“திருக்குறள்”.
“Mom ! What is Kural ?”
“கூகில் வெப்பில் செர்ச் பன்ணு ! (தேடு) ! வில் பி தேர் (அங்கு இருக்கும்) !”
கடைசி காலத்திற்கு நமக்கு வேண்டியது தான் என்று படிக்க முடிவெடுத்தேன் !
மெல்லச் சாவதென்று !!
----

Cinema Tamil Cinema!!!-musings!!!
என்னிடம் 'நீ சின்ன வயதில் யாருடைய விசிறி ' என்று கேட்டு நான் சொன்ன பெயரைக் கேட்டு ஒரு நிமிடம்
திடுக்கிட்டு 'என்ன ' என்றாள். உலகத்திலேயே தலை சிறந்த நடிகர் அவர் ' என்று சொன்னதும் 'இல்லை அதைப் பற்றி ஒன்றும் இல்லை.
பட் ஹி இஸ் லைக் யுவர் டாட் ' என்று பதில் சொன்ன போது அவள் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்தது. அவள் எதிர் பார்த்த 'கனவுக் கதாநாயகர்கள் ' யாரும் அப்போது கிடையாது. கிரிக்கெட் வீரர்களில் கூட நம் ஊர் கிரிக்கெட் வீரர்கள் கிடையாது. பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டாஸ் டாமில் அவ்வப்போது 'மில்ஸ் அண்ட் பூன் ' கதாநாயகர்கள் தென்படுவார்கள். பிஷன் சிங் பேடி, பிரசன்னா, சந்திரசேகர் இவர்களுக்கு நடுவில் கவாஸ்கர், விஸ்வனாத், வெங்சர்கர் கொஞ்சம் இளமையாக இருப்பார்கள். அப்போது கதாநாயகர்களாக நடித்தவர்களின் சராசரி வயது நாற்பது இல்லை ஐம்பதா ? நான் ஒரு லிஸ்ட் தருகிறேன். அதிலிருந்து நீங்களே கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷ், முத்துராமன், ஏவி எம் ராஜன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், எஸ் எஸ் ஆர் எக்ஸட்ரா.... யாராவது இளமையான ஆண்கள் சான்ஸ் கேட்டு வந்தால் ரொம்ப சின்னப் பையனாக
இருக்கிறான் என்று நிராகரித்து விடுவார்களோ ? கதாநாயகிகள் கூட இருபது வருடம் நடித்து புகழடைந்தவர்கள் தான்! அவ்வப்போது இளம் சிட்டுகள் புது முக நடிகைகளாகி 'பழம் பெரும் ' நடிகர்களோடு நடிப்பார்கள். நம் ஊரில்தான் ஆண்களுக்கு வயதே ஆகாதே!
பத்து, இருபது வயது வித்தியாசத்தில் ஆண்களுக்கு வயதானால் என்ன என்று கேட்டு கல்யாணமே செய்து வைத்து விடுவார்கள். பணம் வாங்கி நடிப்பதற்கு என்ன ?அந்த இளம் நடிகைகள் மூத்த நடிகர்களோடு கனவு கண்டு டூயட் பாடுவது 'சைல்ட் அப்யூஸ் ' மாதிரித்தான் இருக்கும். இதை விட கடுமையான வார்த்தையைக் கூட உபயோகிக்கலாம். பாவம் சில 'ரசிகர்கள் ' மனம் உடைந்து விடுவார்கள் என்பதால் வேண்டாம். கதாநாயகனின் கண்ணியம் காப்பாற்றும் பொருட்டு கனவு காண்பது அந்த இளம் நடிகை. 'இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமைதானே '! கடைசி இரண்டு வரிகளை உத்தேசித்து இப்படி காட்சியை அமைப்பார்கள்
போலிருக்கிறது.
இதை விடக் கொடுமை மிடில் ஏஜ் மாமிகளெல்லாம் இளமைத் துள்ளலுடன் நடை போடுவது! படத்தில் முன்பாதியில் கோணவகிடு, காதுகளில் ரிங், பாவாடை தாவணி, இன்னும் கொஞ்சம் மாடர்னானால் டைட்ஸ், ஸ்கர்ட் அணிந்து குதித்துக் கொண்டு இண்டர்வெல்லுக்குப் பிறகு கொண்டை மல்லிகைப் பூ சகிதம் தாலியை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு அடக்க ஒடுக்கமாய் குடும்பப் பெண்ணாகி விடுவார்கள். 'அப்பாவை எதித்தா பேசற ? என்னங்க நம்ப பிள்ளை மாறிட்டான் ' என்று உருக்கமாக வசனம்
பேசுவார்கள்.கொடுக்கிற காசுக்கு அந்த இளம் நடிகைகள் வேண்டுமானால் கனவு காண்கின்ற மாதிரி நடிக்கட்டும். எங்களைப் போன்ற பதினாறு வயது 'மயில்களுக்கு ' என்ன கட்டாயம் ? எதோ அப்பா, பெரியப்பா அளவில் மரியாதை தரலாம். இப்போது 'சித்தப்பு ' நடிகர்களாக இருக்கும் சூப்பர் ஸ்டார், உலக நாயகனெல்லாம் அப்போது குட்டி நடிகர்களாக முன்னேறி கொண்டிருந்தார்கள். இந்த பெரிய நடிகர்களுக்கு தம்பி, மகன், சில சமயம் நண்பனாக நடிப்பதற்கு அவ்வப்போது புது முக நடிகர்கள் வருவார்கள். சிவகுமார், ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த்,விஜயன், சுதாகர், கஷ்ட காலம்தான்! பொதுவாகவே உண்மை வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரீய்ய இடைவெளி இருந்து கொண்டேயிருக்கும். கதாநாயகன், கதாநாயகி அணியும் ஆடை அணிகலனிலிருந்து பேசும் வசனம் வரை உண்மை வாழ்க்கை நிலையை பிரதிபலிக்காது. கிட்டத் தட்ட ஐம்பது அறுபது வயது கதாநாயகன் கோட் சூட் அணிந்து கொண்டு (இதில் ஒருவர் அணிவது தொப்பையை
மறைக்க) பட்டப்படிப்பு முடித்து விட்டு வரும் கட்டிளங்காளையாக தன்னைவிட இளமையான அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் ' என்று பாடுவார். ஒரு ரசிகக் கூட்டமே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்.
பணக்கார அம்மாக்கள் வீட்டிலேயே கல்யாணத்திற்கு கிளம்புபவர்கள் போல் பெரிய கொண்டை நிறைய பூ, எக்கச்சக்கச் ஜரிகை போட்ட பட்டுப் புடவை, நெக்லஸ் இத்யாதிகளோடு சர்வலங்காரத்தோடு தான் காணப்படுவார்கள். ஒருவேளை பணக்கார ஆன்ட்டிகளின் யூனிஃபார்ம் அதுதானா ? பங்களாவுக்குள் நுழைந்து யார் பார்த்தார்கள் ? நடிகர்களின் ஆதிக்கத்தையும் மீறி கேஎஸ்ஜி, ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா என்று டைரக்டர்களுக்காக என்று நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருந்தன. கேவிஎம் மாமா, மெல்லிசை மன்னர் டியிலிருந்து மீண்டு இளையராஜா இசை என்ற புதுமை. அது வரை பின்னணி இசையென்றால் குதிரைக் குளம்பபொலி, சோக வயலின் ஷுயூம் டிஷுயூம் சத்தம்தான் கேட்கும். பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணரச் செய்ததே இளையராஜாதான்! சினிமாவை டெக்னிகலாக அணுகுகின்ற அறிவுஜீவித்தனம் மெல்ல வெளிப்பட ஆரம்பித்த காலம்.
என்ன புதுமைகள் வந்தால் என்ன ? தமிழில் 'கலைபடங்கள் ' என்ற அமைப்புக்கே இடமில்லை. ஹிந்தியில், நம்ப பக்கத்து மாநிலமான
கேரளா, கர்நாடகம், ஆந்திராவிலிருந்து கூட 'கலைப்படங்கள் ' வரும். தமிழ் ரசிகர்கள் 'கலையம்சத்தோடு ' கூடிய கமர்ஷியல் படங்களை
ஒத்துக் கொள்வார்களே தவிர இதையெல்லாம் சீந்த மாட்டர்கள். நாயகன் படத்திலே கூட 'நிலா அது வானத்து மேலே ' என்று குயிலி ஆட்டம் வேண்டும். ஸ்ரீதர், பாலச்சந்தர் கொஞ்சம் யோசித்து வித்தியாசமானப் படங்கள் தந்தாலும் தமிழ் பண்பாடு, தாலி சென்ட்டிமென்டை விட மாட்டார்கள். நெஞ்சத்தைத் தொட்ட பிரமாதமானப் படம்தான்! நல்ல ஆரோக்கியத்தோடு சமுதாயத்திற்கு செம தொண்டு செய்யும் டாக்டர். பழைய காதலி புற்று நோய் முற்றிய நிலையில் இருக்கும் கணவனுடன் டாக்டரிடம் சிகிச்சைக்காக வருகிறாள்.
கணவனே பெருந்தன்மையுடன் நான் இறந்தாலும் நீ நல்ல விதமாக வாழ வேண்டும் என்றாலும் ' தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா ? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ' என்று உருக்கமாகப் பாடி டாக்டரையும் உணர்ச்சிகரமாகப் பேசி மிரட்டி, கடைசியில் சாகப் பிழைக்க இருந்த கணவன் உயிர் தப்ப நல்ல திடமாக இருந்த டாக்டர் இறந்து விடுவார்.என்ன அநியாயமான முடிவு ? இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்த நல்ல படம்தான். பாலச்சந்தராவது பெண்கள், தாலி என்ற சென்டிமென்டை மாற்றுவாரா என்று பார்த்தால் தன்னைக் கெடுத்தவனையே திருமணம் செய்து கொள்ளும் 'புதுமைப்பெண் '
கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டு தாலி கட்டினாலும் பைத்தியம் பிடித்து அலையும் கதாநாயகி,
(சிவகுமார் உங்களுக்கு நல்லபடியாக வாழ வழியே இல்லையா ?) சாடிஸ்ட் கணவனை வெறுத்து தாலியை கழட்டி கோவில் உண்டியலில்
போட்டதும் கணவனுக்கு கண்ணில் அடிபட்டு விடும். சிந்துபாத் கழுத்தில் தொங்கும் சின்ன லைலா மாதிரி கணவன் உயிர் மனைவியின் தாலியில் தொங்கிக் கொண்டிருக்கிறதா என்ன ? இந்த ஊர் சீனப் பையன்களுக்குக் கூட தாலியின் தாத்பர்யம், வித விதமான தாலி வகைகள் முதற் கொண்டு ஐய்யர் தாலி, ஐய்யங்கார் தாலி, செட்டியார் தாலி, முஸ்லிம், கிறிஸ்துவர்கள், மற்றும் 'சீர் திருத்த ' தாலி கூடத் தெரியும்.இவ்வளவையும் தெரிந்து கொண்டு 'வேர் இஸ் யுவர் வெட்டிங் ரிங் ? ' என்று வேறு இன்னும் விசாரிப்பார்கள். ஆனா நம்ப ஊர் 'சின்னத் தம்பிக்கு ' மட்டும் தாலி என்றால் என்னவென்றே தெரியாமல் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வார். நாமும் அதை சூப்பர் ஹிட்டாக்கி விடுவோம். தாலியே கட்டாமல் குழந்தையைக் கொடுத்து விட்டு ஓடிப்போன காதலன் இறந்தவுடன் பொட்டழித்து விதவைக்கோலம் பூணும் எம்ஆர்பி உங்களுக்காகக் காத்திருக்கும் அழகான இளமையான எலிஜிபில் பேச்சுலர் ஆசையில் மண் அள்ளிப் போட எப்படி மனசு வந்தது ? பெண்கள் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கும் கணவனுக்கு தாலி கட்டி விடும் பொஸசிவ் மனைவி என்று குறும்புகள்! குடும்பப் பட டைரக்டர் கேஎஸ்ஜி கேட்கவே வேண்டாம். இரண்டு நல்லவர்கள் மோதிக் கொண்டு ஒரு பெண்ணின் ழ்க்கையைப் பந்தாடுவார்கள். திருமண வாழ்க்கையில் பிரச்னை என்று கணவனே மனைவிக்கு வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் புதுமை என்று பார்த்தால் மனைவி கணவன் காலில் விழுந்து உயிரை விட்டு விடுவாள். 'ஆயிரத்தில் ஒருத்தியாக ' இருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட கதாநாயகியைப் புரிந்து கொண்டு கதாநாயகன் வாழ்க்கைதர முன் வந்தாலும் கெட்ட பெயர் வந்து விட்டதே என்று உயிரை விடும் கதாநாயகி! எத்தனை பாரதி, பாரதிதாசன், பெரியார் வந்தால் என்ன ? பெண்களை இப்படி சென்ட்மென்டால் மூளைச் சலவை செய்வதில் தமிழ் சினிமாவின் பங்கு என்று பெரிய ஆய்வு நடத்தி படம் பெறலாம். இப்போது பரவாயில்லை!
தலைகாணிக்கடியில் கழற்றி வைத்த தாலியை தேடி 'அலைபாயும் ' கதாநாயகி! தாலியை கண்ணாடியில் தொங்க விட்டு விட்டு மனைவியை
சீண்டி சிரிக்கும் கணவன்! தமிழ் சினிமா முன்னேறி விட்டது.
சினிமா பார்ப்பதிலும் சினிமாவைப் பற்றி பேசுவதிலும் ஏகப்பட்ட தடைகள், கெடுபிடிகள் இருந்தன. சினிமாவே பார்க்கமாட்டோம் என்று அலட்டிக் கொள்ளும் சமத்துப் பெண்கள், நல்ல படங்கள் மட்டும் செலக்ட் பண்ணிப் பார்க்கும் 'அறிவு ஜீவிகள் ', சான்ஸ் கிடைத்தால் எந்த திரைப்படத்தை வேண்டுமானாலும் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள், அம்மா அப்பாவோடு தேவரின் தெய்வம், துணைவன் போன்ற படங்கள் பார்க்கும் 'பக்திமான்கள் '. இப்படி நிறைய வகையினர் இருந்தாலும் சினிமா என்ற மாய வார்த்தை எல்லோரையும் மயக்கிக் கொண்டுதான் இருந்தது. சினிமாவே பார்க்காத பெண்கள் கூட கதை கேட்கிறேன் என்று ஒரே சினிமா கதையை மூன்று பேரிடம் கேட்டு திருப்தி அடைவார்கள். தமிழ் சினிமா என்ன பெயரில் வந்தால் என்ன ? எல்லாம் கிட்டத்தட்ட ஒரே ஃபார்முலாதான்! சமூகப் படம் என்றால் திருமணம் முடிந்து முதலிரவு அறையில் நுழைந்ததும் கிருஷ்ணராஜா சாகரில் டூயட் பாடுவார்கள். பக்தி படம் என்றால் முதலிரவில் 'நம் திருமணம் முடிந்ததும் பழனிக்கு நடந்தே வந்து உங்களுக்கு மொட்டையடித்து நம் முதல் குழைந்தைக்கு முருகன் திருநாமம் வைத்து வணங்க வேண்டும் அத்தான் ' என்று பக்தி பரவசத்தோடு டூயட் பாடுவார்கள். கற்பழிப்பு காட்சி என்றால் காப்பாற்றுவதற்கு எங்கிருந்தோ
அருவியில் குதித்து கயிற்றில் தொங்கி கடைசி நிமிஷத்தில் கதாநாயகியின் கற்பை கதாநாயகன் காப்பாற்றி விடுவான். பக்தி படமென்றால்
முருகா முருகா என்ற அலறல் சத்தம் கேட்டு மயில் பறந்து வந்து வில்லனை குத்திக் குதறும். வழக்கம் போல் கவர்ச்சி நடனம்!
கிளப்பில் கேபரே நடனம். இல்லை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி நடனம், நாட்டுப்புற கலைகளான குறத்தி நடனம், மயிலாட்டம், கரகாட்டம் என்று கவர்ச்சி வழிய ஆட்டம்! பெண் குழந்தைகளை கன்னாபின்னா படங்கள் பார்த்து மனசு கெட்டுப் போய்விடாமல்
பாதுகாத்து பக்தி படங்கள் மட்டும் பார்க்க அனுமதிக்கும் அப்பா அம்மாக்களுக்கு இந்த சூட்சுமம் புரிந்ததில்லை. பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அந்த வயதில் தெரிய வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டுதான் வளர்கிறார்கள் என்பது புரியாமலா இருக்கும் ?
அப்பா அம்மாவுக்கு பதினாறு வயது வரவில்லையா ?
எத்தனை அபத்தங்களோடும் முரண்பாடுகளோடும் திரைப்படம் வந்தாலும் மூன்று மணி நேர மாய பிம்பம் பிரமிப்பைத்
தந்தது. சந்தோஷத்தைத் தந்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உண்மை வாழ்க்கை இதை விட அபத்தங்களும்
முரண்பாடுகளையும் கொண்டதுதானே ?
கனவுக் கதாநாயகன் யார் என்று சொல்லவே இல்லையா ? போனால் போகிறது என்று ஒரே ஒருவருக்கு பாஸ்மார்க் கொடுத்திருந்தோம். மீண்டும் நன்றாகப் படித்துப் பாருங்கள்! கண்டு பிடித்து விடலாம்!
netvasi@gmail.com

Subscribe to:
Posts (Atom)