Search This Blog

Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Thursday, December 11, 2008

தேறாத் தேடல்!!!

தேரை இழுக்கும்
நான்கு குதிரைகளை
நானும் இழுத்திருக்கிறேன்!!

சூரியத் துரத்தலின்
முடிவில்
உருண்டையாய் உண்மை!!!

Sunday, November 23, 2008

சொல்லின் மருவு...!!!!!

சொல்லுதல்,சாற்றுதல்,
அறைதல்,அளாவல்,
வியம்புதல்,விளக்குதல்,
செப்புதல்,சலித்தல்,
உரைத்தல்,உசாவல்,
விளம்புதல்,விளித்தல்,
மொழிதல்,முனகுதல்,
இயம்புதல்,இசைத்தல்,
பறைதல்,பகலுதல்,
கூறுதல்,குழறல்,
பேசுதல்,ஆற்றுதல்,
புறத்தல்,கத்துதல்,
இன்றி
அகத்தலாய்
ஓலத்துடன்...

Friday, November 7, 2008

பால பாடம்...

மரககூழ் புத்தகத்தில்
"மரம் வேட்டதே"-என்று
எழுதி இருந்தால்???

கொதி நிலை இன்பிநிட் செல்சியஸ் !!!

சுட்ட எண்ணையில்
நீந்தக் கற்று..
தூங்கு நீச்சல் அடிக்கும்
தங்க மீன் குஞ்சு...!!!

தொலைந்த உறக்கம்!!

அது எழுந்து
அவர்கள் அழுகிறார்களா?
என்று பார்த்தது.
மருமகளை
அழச்சொல்லி விட்டுப்
படுத்துக் கொண்டது.
பின்
அவளும்
அவர்களும்
அலறி அழுதனர்!!!