Search This Blog

Saturday, March 20, 2010

கண்ணதாசனின் பாடல்

வாழ்கையின் அனைத்து மர்மங்களுக்கெல்லாம் விடை கவிஞரின் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் வரிகளில் உள்ளது.
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்



கண்ணதாசனின் அர்த்தமுள்ள அடி அந்தாதி இதோ ...

அடி அந்தாதி என்பது ஒவ்வொரு அடியின் ஈற்றில் அமையும் சொல் அடுத்த அடியின் முதலாகப் பாடுவது..

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்...

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்...
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்ககணைகள் !!

மலர்ககணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சணைகள்..
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனம் இரண்டும் தலையணைகள்...

தலையணையில் முகம் புதைத்து சரசம் இடும் புதுக்கலைகள்..
புதுக்கலைகள் பிறப்பதற்கு பூமாலை மணவிலைகள்...

மணவிலைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்...
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீர் அலைகள்...

மூன்று முடிச்சிலிருந்து
நன்றியுடன்...
எந்த ஊர் என்றவனே ..

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூ<ரில் விழுந்து விட்டேன்!

கண்ணூ<ரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

No comments: